search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பால் வியாபாரி பலி"

    • பஸ் சக்கரத்தில் மோட்டார் சைக்கிள் சிக்கி பால் வியாபாரி பலியானார்.
    • உசிலம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    உசிலம்பட்டி

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வத்தலகுண்டு சாலையில் உள்ள பெரிய செம்மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் பால்ராஜ். இவரது மகன் ரூபன் (வயது 18). வீடுகள், கடைகளுக்கு பால் விநியோகம் செய்து வந்தார். இன்று காலை பால் விநியோகம் செய்வ தற்காக மோட்டார் சைக்கி ளில் சென்றார்.

    அதே வேளையில் கொடைக்கானலை சேர்ந்த பாலமுருகன் மகன் விஷ்ணு (35) பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டி ருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக விஷ்ணு ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள், ரூபன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் ரூபனின் மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி கீழே விழுந்து எதிரே வந்த அரசு பஸ் சக்கரத்திற்குள் சிக்கியது. இதனால் படுகாயமடைந்த ரூபனை அங்கிருந்தவர்கள் மீட்டு உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    பின்னர் மேல் சிகிச் சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்தில் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த விஷ்ணுவும் படுகாய மடைந்து உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுகுறித்து உசிலம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • சுப்பிரமணி விவசாயம் பார்த்துக்கொண்டு பால் வியாபாரம் செய்து வந்தார்.
    • சாலையில் வந்து கொண்டிருந்தபோது ஜேடர்பாளையத்திலிருந்து பரமத்தி நோக்கி அதிவேகமாக வந்த லாரி சுப்பிரமணி ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையம் அருகே அரசம்பாளையம் காலனி பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (57). இவரது மனைவி விஜயா (53). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது.

    இந்நிலையில் சுப்பிரமணி விவசாயம் பார்த்துக்கொண்டு பால் வியாபாரம் செய்து வந்தார். நேற்று மதியம் ஜாதகம் பார்ப்பதற்காக தனது மோட்டார் சைக்கிளில் பரமத்திவேலூர் சென்றுவிட்டு மாலை வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார்.

    பரமத்தி- ஜேடர்பாளையம் சாலையில் வந்து கொண்டிருந்தபோது ஜேடர்பாளையத்திலிருந்து பரமத்தி நோக்கி அதிவேகமாக வந்த லாரி சுப்பிரமணி ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சுப்பிரமணி நிலைத்தடுமாறி விழுந்ததில் பலத்த காயமடைந்தார்.

    அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் சுப்பிரமணி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனிடையே லாரி டிரைவர் லாரியை நிறுத்திவிட்டு தப்பியோடி விட்டார்.

    விபத்து குறித்து சுப்பிரமணியின் மனைவி விஜயா ஜேடர்பாளையம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து லாரியை பறிமுதல் செய்தனர். மேலும் லாரி டிரைவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    ×